×

குளித்தலை நூலகம்- ரயில்வே கேட் வரை நடைமேடை அமைத்து வர்ணம் பூசும்பணி தீவிரம்

குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை நூலகத்திலிருந்து மணப்பாறை சாலை ரயில்வே கேட் வரை செல்லும் சாலை உள்ளது. இச்சாலை குளித்தலை மற்றும் கிராமப்புறத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் விவசாயிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கிறது. இந்த சாலை அருகே ரயில்வே தண்டவாளம் செல்கிறது. இதில் தினந்தோறும் விரைவு ரயில், பயணிகள் ரயில் ,சரக்கு ரயில் சென்று வருகிறது. இந்நிலையில் குளித்தலை நகர பொதுமக்கள் பொழுதுபோக்கு அம்சத்திற்கும் நடைபயிற்சி மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எம்எல்ஏ மாணிக்கத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர். கோரிக்கையை ஏற்ற எம்எல்ஏ மாணிக்கம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்பொழுது மணப்பாறை ரயில்வே கேட்டில் இருந்து நடைமேடை பணி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இருபுறமும் வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்பணி விரைந்து முடித்திட வேண்டும். தொடர்ந்து இந்த பணிகள் முடிந்தால் குளித்தலை காவேரி நகர் அண்ணா நகர் மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து நடைபயிற்சி மேற்கொள்ளும் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதனால் இரவு நேரங்களில் பாதுகாப்பு நலன் கருதி சாலை ஓரங்களில் புதிதாக மின் கம்பங்கள் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குளித்தலை நூலகம்- ரயில்வே கேட் வரை நடைமேடை அமைத்து வர்ணம் பூசும்பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kulithalai ,Library ,Kulithalai library ,Karur district ,Manaparai ,Bathing Library ,Dinakaran ,
× RELATED கரூரில் நாய்களிடம் கடிபட்டு புள்ளி மான் உயிரிழப்பு..!!